ICU-ல்.. தீவிர சிகிச்சையில் இருந்த பெண்.. வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்..

3419

டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, ஐ.சி.யு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனை ஊழியர் ஒருவர், அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த அப்பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள பெண் மீதும், பாலியல் ரீதியிலான தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

Advertisement