ஆம்புலன்சிலேயே உயிரிழந்த 6 பெருந்தொற்று நோயாளிகள்

301

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாததால், ஆம்புலன்ஸ்களில் காத்திருந்த 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலான மருத்துவமனைகள்  சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் வழங்குதல், படுக்கைகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெருந்தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் பெருந்தொற்று நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.   இதனால் ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாசம் மூலம் சிகிக்சை பெற்றவாறு ஆம்புலன்சில் காத்திருந்த 6 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருந்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement