நலத்திட்ட உதவிகள்..! தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி | Chennai | Patrol Vehicles

555

“அம்மா ரோந்து வாகனம்” உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 40 அம்மா ரோந்து வாகனங்கள், 201 உடல் இணை புகைப்பட கருவிகள், புதிய மின்சார பேருந்து, தக்காளியை கூழாக்கும் இயந்திரங்களோடு கூடிய 5 வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும், தலா ஒரு ரோந்து வாகனம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 வாகனங்கள் அவசர தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் பிற மாவட்டங்களுக்கும் ரோந்து வாகனம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

Advertisement