அவர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் | Ramadoss | PMK

321

வீட்டு வசதி சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக மாறியிருப்பதாக கூறியுள்ளார்.

அச்சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அவல நிலைக்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களிடமிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், இத்திட்டம் மீண்டும் பழைய நிலைக்கே மாற்றப்படும் பட்சத்தில் அச்சங்கங்கள் வலிமையடையும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement