Google Play Store-ல் இருந்து நீக்கப்பட்ட Paytm செயலி..!

679

உலகின் நம்பர் ஒன் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்று கூகுள். பல்வேறு சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனம், செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடிய Google Play Store என்ற சேவையையும் அளித்து வருகிறது.

பலரும் இந்த சேவையின் மூலம் தான் செயலிகளை தரவிறக்கம் செய்து வருவதால், கூகுளின் மறைமுக கட்டுப்பாட்டில் தான் அனைத்து செயலிகளும் உள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறியதாக கூறி கூகுள் Google Play Store-ல் இருந்து, Paytm என்ற பணப்பரிமாற்ற செயலியை கூகுள் நீக்கியுள்ளது.

இந்த தகவல் அந்த செயலியின் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement