பழனி பஞ்சாமிர்தம்..! அதிரடி முடிவு எடுத்த அரசு…!

497

மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக பழனி பஞ்சாமிர்தம் இணைகிறது.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டதாகும். வாழைப்பழம், வெல்லம், நெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்தது பழனி பஞ்சாமிர்தம்.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை என்பது இதன் சிறம்பம்சமாகும். பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை.

இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of