பழ கருப்பையா பணம் கொடுத்தால் தான் மேடையிலேயே பேசுவார் – உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

834

திருவாரூர் இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், பழ கருப்பையா நாக்கை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யக் கூடியவர் என்று தெரிவித்தார். பல கட்சிகளுக்கு மாறிய அவர், அ.தி.மு.க-வில் இருந்த போது தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தான் மேடையில் பேசியதாக கூறினார்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் கரைபடியாதவார்கள் என்றும் இதுதொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்க பழ கருப்பையா தயாரா என்றும் அமைச்சர் காமராஜ் சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், இலவச பொருட்களை வேண்டாம் என்று மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.