ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – ஏறுமுகத்தில் பிவி சிந்து | Hong Kong Open badminton

1026

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சிந்து போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-15 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை 18 நிமிடங்களில் கைப்பற்றினார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவைச் சேர்ந்த காய் யான் யானிடம் 13-21, 20-22 என வீழ்ந்தார்.