சமரச பேச்சு – ஈரான் சென்றார் இம்ரான் கான் | Imran Khan in Iran

331

கடந்த மாதம் 14ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டுகின்றன. கடந்த 11ம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த ஈரானுக்கு சொந்தமான ‘சபிதி’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படிப்பட்ட தாக்குதல்களால் ஈரான், சவுதி அரேபியா இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விஷயத்தில் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன் வந்துள்ளார். இதற்காக அவர் நேற்று ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of