மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மலைக்கிராம மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்பு

869

தேனி மாவட்டத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மலைக்கிராம மக்கள்10-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 16 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அகமலை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சாலை வசதி கூட இல்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு மலை கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மலைக்கிராமத்திற்கு போதிய மருத்துவர்களை அனுப்பி, மர்ம காய்ச்சலிலிருந்து உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement