ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டங்களால் பொது மக்கள் அச்சம்

613

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் யானைகள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

குண்டீஸ் என்ற கிராமத்தில் 12யானைகள் கூட்டமாக வலம் வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊருக்குள் வலம் வரும் யானைகள் வயல் வெளிகளில் விரட்டப்பட்டன.

இதனால், நெற்பயிர்கள் நாசமாகி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement