மதுரையில் பெய்த கனமழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

392

மதுரையில் இரவு பெய்த கனமழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகம் முழுவதும் ஏழாம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், முக்கிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of