NPR-க்கு மதம் தொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டியதில்லை – ஆர்.பி. உதயக்குமார்

245

சட்டப்பேரவையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில்,
மதம் குறித்த கேள்வி கேட்கப்படுவது இல்லை என தெரிவித்தார்.

பதிவேட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் தெரிவித்தாலே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஆதாரங்களை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.

பதிவேட்டில் உள்ள கூடுதல் கேள்விகள் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக விஷம பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of