அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…

516

வங்காளதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடம்  சாவ்க்பஜார். இந்த பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுஅடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து அக்கம் பக்கத்தில் பரவியது.

இத் தகவல் அறிந்த தீயனைப்பு வீரர்கள் தீயை அணைககும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 மேற்ப்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் உயிரிழந்திருகாலாம் என அஞ்சபபடுகிறது. கேஸ் சிலிண்டர் மூலம் தீப்பற்றி இருக்கலாம் என கூறுகின்றனார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of