-93 டிகிரியில் உறைந்த மாமிசம் உண்டு வாழும் அதிசய மக்கள்

1118

குளிர்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், மழைக்காலம் என்று பல பருவமாற்றங்களை வருடம்தோன்றும் நாமும் உலகின் பிற நாடுகளும் அனுபவித்து வருவது எல்லோரும் அறிந்ததே. நம் நாட்டை பொறுத்தவரை குளிர்காலம் என்பது குறைந்த பட்சம் 18 டிகிரியில் இருந்து -10 முதல் -15 வரை செல்லும். மேலும் சிக்கிம் மாநிலத்தில் ஒரு முறை -40 டிகிரி பதிவானதாக கூறப்படுகிறது. -40 டிகிரி என்பது உலகின் சில நாடுகளை பொறுத்தவரை சகஜமா குளிராகும். இருப்பினும் இந்த பூமி பந்தில் ரஷ்யா போன்ற வெகுசில நாடுகளும் அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் சில பாகங்களில் நிளவும் தட்டவெட்பம் உலகையே ஆச்சர்யப்படவைக்கிறது.

Verkhoyansk” ரஷ்யா நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டம், உலகின் மிக மிக குளிரான இடமாக இதுவரை திகழ்ந்து வருகிறது. Verkhoyansk, யானா நதிக்கரை ஓரத்தில் ஆர்டிக் வட்டத்தில் இருந்து 93 கி.மி தூரத்தில் அமைந்துள்ள முற்றிலும் உறைந்து போன ஒரு அழகிய வெள்ளை போர்வை போர்த்திய மாவட்டம். Cossacks இன மக்களால் 1638ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடம். “The Land of Upper Yana” என்று அழைக்கப்படுகிறது Verkhoyansk என்பதற்கு அதுவே பொருள். யானா நதிக்கரையின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் சாக்கா republicஇன் yakutsk என்ற நகரத்தை சார்ந்த இடம் தான் இந்த Verkhoyansk என்ற அதிசய நகரம்.

russia-2

பிற இடங்களை போல இந்த மாவட்டமும் தனக்கென்று தனியாக சிறிய விமான நிலையமும், நதியயை ஒட்டிய ஒரு சிறு துறைமுகமும் கொண்டது. ஆதனால் இங்கு நீளவும் குளிரோ உலகின் வேறெங்கும் இல்லாத அளவில் அதீதமாக உள்ளது. வாருங்கள் முற்றிலும் உறைந்து போன இந்த இடத்தை பற்றி முழுமையாய் காண்போம். ரஷ்யா பொதுவாகவே அதிக குளிரான நாடாக திகழும் இடம். அதுவும் இந்த இடம் North Pole அருகில் உள்ள மாவட்டம் ஆதலால் இது இந்த அளவிலான உறைநிலையில் உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்களும் அதற்கு ஏற்ப தங்களையும், தங்கள் சுற்றுப்புறத்தையும், தங்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி அமைத்து கொண்டுள்ளனர். மிகவும் குளிரான பகுதி ஆதலால் இங்கு பிற இடங்களை போல பயிர்கள் விளைவதில்லை. நதியில் கிடைக்கும் மீன் மற்றும் மாமிசமே இவர்களின் பிரதான உணவாக உள்ளது. அதுவும் கடைவீதியில் -45 டிகிரி குளிரில் உறைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.

russia-1

இந்த மொத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தனி தனியாக ஒரு அனல் மின் நிலையத்தில் உதவியால் வருடம் தோறும் சூடாக்கப்படுகிறது. சனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 16 டிகிரி வெட்பம் என்பதே இங்கு நீளவும் அதிகபட்ச வெட்பம். பிற மாதங்களில் -1 முதல் -63 டிகிரி வரை உறைநிலைக்கு கீழான குளிர் திகழ்கிறது. இந்த இடத்தை பொறுத்தவரை வாகன பயன்பாடு குறைவே, எனினும் இந்த மக்கள் தங்கள் வாகனங்களை ஓரளவு குளிரில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள குறுகிய ஷெட்டுக்குள் நிறுத்துகின்றனர், ஆச்சர்யத்தின் உச்சம் என்னவென்றால் இந்த ஊரில் பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் என்ஜின் ஒருபோதும் நிறுத்தப்படுவதில்லை என்பதுதான், காரணம் என்ஜின் நிறுத்தப்பட்டால் சுற்றி உள்ள அதீத குளிரால் என்ஜின் உறைநிலைக்கு சென்று மீண்டும் வாகனத்தை இயக்க முடியாமல்போய்விடும்.

russia-3

இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை முறைக்கு உற்ற தோழனாக கருதப்படுவது கலைமான்கள், இந்த மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவரவும், தங்கள் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் கலைமான்களே பயன்படுத்தப்படுகின்றன. உலகில் கலைமான் வளர்ப்பில் இந்த இடம் உச்சத்தில் இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. சரியான உணவு, சீர்தோஷன நிலை, வாகன பயன்பாடு ஏதும் இல்லை என்றாலும், இங்கு வாழ்வதை இந்த மக்கள் வெறுப்பதில்லை, கடந்த 2010ம் ஆண்டு குளிர்க்கத்தில் -93 டிகிரி குளிர் இங்கு பதிவாகி உள்ளது, உலகிலேயே இது தான் இதுவரை பதிவான அதிகபட்ச குளிர். மேலும் இனி வரும் காலங்களில் இந்த இடம் -120 டிகிரி குளிரை கூட தொடும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of