நிலச்சரிவு இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் – ராகுல் காந்தி

196

கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ராகுல் காந்தி, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்டகால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of