குறைந்து வருகிறதா ? “தனித்துவமான படங்கள்” | Unique Movies

948

தமிழ் சினிமாவை பொறுத்தவரை Commercial என்கின்ற ஒரு தலைப்பை தாண்டி, வெகுசில படங்கள் மட்டுமே தனித்துவமான தன்மையை கொண்டுள்ளது. 1963ம் ஆண்டு MGR நடிப்பில் வெளியான ‘கலையரசி’ என்கின்ற படமே தமிழில் வெளியான முதல் space movie. வேற்று கிரகத்திலிருந்து வந்து மக்களை கடத்திக்கொண்டு போகும் வேற்றுகிரக வாசியாக நம்பியார் அவர்கள் நடித்திருப்பார்.

kalaiyarasi

1948ம் வருடம் ஒரே நாளில் சுமார் 40 திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வசூல் சாதனையை பெற்ற திரைப்படம் தான் சந்திரலேகா, அந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இடம்பெற்ற முரசாட்ட காட்சி இன்றும் பேசப்படுகிறது.

chandraleka

ஒன்பது வேடங்களில் நடித்த சிவாஜி அவர்களின் நவராத்திரி, ஒரே படத்தில் நான்கு வெவ்வேறு மொழில்களில் வசனம் எழுதி எடுக்கப்பட்ட படமான பாரத விலாஸ், கமல் அவர்களின் வசனமில்லா பேசும்படம், பாடலே இல்லாத குருதிப்புனல் இப்படி தனித்துவமான படங்களின் எண்ணிக்கை நாள்பட நாள்பட குறைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

pesum-padam

ஆனால் தற்போது டிக் டிக் டிக், நேற்று இன்று நாளை போன்ற படங்களால் Commercial என்கின்ற அடிப்படையை தாண்டி முன்போல் படங்கள் வர தொடங்கியுள்ளன. இதற்கு சான்றாக சமீபத்தில் ஒரு தனித்துவமான அம்சத்தோடு வெளியான திரைப்படம்தான் ஒத்த செருப்பு சைஸ் 7. தனித்துவமான இயக்கத்திற்கு பெயர்போனவர் பார்த்திபன்.

othserupu

அவரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தின் விநியோகம் மற்றும் “mono acting”ல் வெளியான படம்தான் ஒத்த செருப்பு – “mono acting” அதாவது படம் முழுக்க வேறு யாரும் திரையில் வராமல் ஒரே நடிகரே படம் முழுக்க நடிக்கும் ஒரு படம். வெகு சில படங்களே இந்த பாணியில் வந்துள்ளது, அதுவும் தமிழில் இதுவே முதல் படம். அதிலும் குறிப்பாக கதை வசனம் நடிப்பு போன்ற பல விஷயங்களை பார்த்திபன் ஒருவரே கையாண்டதால் இந்த படத்தை உலக சினிமா வரலாற்றின் ஒரு மயில் கல் என்றே கூறலாம் என்பது விமசகர்கள் கருத்து.

அவ்வப்போது வரும் இது போன்ற வித்யாசமான திரைப்படங்களை மக்கள் ஆதரித்து வரவேற்கவேண்டும் என்பது கலைஞர்களின் வேண்டுகோள்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of