அந்தமான் தீவுகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி

456
andaman-island

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமானில் நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்கம் மறைவதற்குள், அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.