வெங்காயத்தின் விலை உயர்வு..! ஆதார் அட்டை..! அடகு வைத்த மக்கள்..!

561

நாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 140 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இதனால் சமையலில் பயன்படுத்த வெங்காயம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கிடையே, விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாட்டுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், வெங்காய விலை உயர்வை கண்டிக்கும் வகையில், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடை வைத்துள்ள சமாஜ்வாதி கட்சியினர், ஆதார் அட்டைகளை பெற்றுக்கொண்டு, வெங்காயத்தை விற்பனை செய்கின்றனர்.

வெங்காய பற்றாக்குறையின் காரணமாக பொதுமக்களும் தங்களது ஆதார் அட்டைகளை அடகு வைத்து, வெங்காயத்தை கடனாக பெற்று செல்கின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of