சிக்கிய கண்டெய்னர் லாரி.., தேர்தல் பறக்கும் படை விசாரணை

775

கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். அதுமட்டுமின்றி அதன் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் இதனைத்தடுத்தனர். ஆனால் பொதுமக்கள் கண்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடியதன் பின்னணி என்ன என்பது பற்றி பல சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இந்த கண்டெய்னர் லாரியை எங்கள் முன்னிலையில் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of