யானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது!

136

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மொரப்பூர் காப்புக்காட்டில் கடந்த 25-ம் தேதி ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

 

கால்நடை மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் யானை துப்பாக்கி குண்டில் இறந்தது தெரியவந்தது.

அவர்கள் நடத்திய விசாரணையில் மொரப்பூர் கொள்ளை கிராமத்தை சேர்ந்த ஜெயவேல், கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ், மணி ஆகிய மூன்று பேர், யானையை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.