முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

540

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்றும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயரவை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனையொட்டி போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மறைந்த பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும், 4 ஆண்டுகளில் அகில இந்திய காங்கிரஸ் போராட்டம் அறிவித்திருப்பது இதுவே முதன்முறை என்றும் தெரிவித்தார்.

எனவே முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரி வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் ஒத்துழைப்புதர வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

Advertisement