பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்

648

திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தருமபுரியில் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையில் ஜனநாயகம் வென்றுள்ளதாகவும், ராஜபக்சாவுக்கும், சிறிசேனாவுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்பட்டள்ளதாகவும் கூறினார்.

இதேபோன்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

Advertisement