அதிமுக-வின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்வார்கள் – டிடிவி தினகரன்

318

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக-வின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NIA அமைப்பு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் அரசியல் தூண்டுதலில் செயல்படக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக-வின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மை மக்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது இருந்த செயல்பாடுகள், தற்போதைய ஆட்சியில் இல்லை என்று கூறிய தினகரன், வேலூர் தொகுதியில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement