துணை ராணுவ படையில் 76 ஆயிரம் பேருக்கு வேலை – மத்திய உள்துறை !

67

மத்திய ஆயுதப்படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவ படைகளில் மொத்தம் 76,578 பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒதுக்கீடு 7,646 இடங்கள். 54,953 காவலர்கள், 1,073 சப்–இன்ஸ்பெக்டர்கள், 466 உதவி கமாண்டன்டுகள், இதுதவிர இதர தொழில்நுட்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வு ஆணையம் மூலம் இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.