1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

465

விருதுநகரில் சுமார் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக மழை துளியும் கண்ணில் காட்டாததால் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலையில் கரு மேகங்கள் கூடி மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கரு மேகம் கூடி ஏமாற்றாமல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய துவங்கியது. இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர்  மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை  பெய்தது.

விருதுநகர், அல்லம்பட்டி சூலக்கரை‌, சத்திரரெட்டியபட்டி, கருப்பம்பட்டி, வில்லிபத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திட்டக்குடியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றியுள்ள பகுதியில் 2 மணி நேரம் திடரென பரவலாக மழை பெய்தது. திட்டக்குடி, வாகையூர், தொழுதூர்,பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் நல்ல மிதமான மழைபெய்தது.

கடுமையான வெயிலில் சிக்கிதவித்த மக்களுக்கு இந்த திடீர் மழையால்  குளிர்ந்த காற்று வீசி வந்ததால் வெயிலின் தாகம் தனிந்து இதனால் பொதுமக்கள் மகிழ்சிடைந்தனர்