அரசியல் காரணங்களுக்காக எடுக்கும் கொள்கை முடிவுகளால் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

166
Tamilnadu Government Multi Super Speciality Hospital

தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தமிழக அரசு ரகுபதி ஆணையம் அமைத்தது.

இதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணையங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டு, விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டது.

ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதால் அதனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுக்கள் வாபஸ் பெறுவது குறித்து அறிவித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதும், அதனை அழகுபடுத்துவதும் தேவையா? என கேள்வி எழுப்பினார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைத்து அதற்கு 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், அரசியல்காரணங்களுக்காக எடுத்த கொள்கை முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்தார்.

மேலும், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும், வரிப்பணம் வீணடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்ப ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here