6 முதல் 8ம் வகுப்புகளுக்கான ஸ்மார்ட் கிளாஸ் – செங்கோட்டையன்

770

6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றும் பணி நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை சேர்ந்த 285 பதின்மப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணியும், 9 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினிகள் அமைக்கும் பணியும் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.

மத்திய அரசு நிதி உதவியுடன் 670 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Advertisement