பெரம்பூர் தொகுதி Result! வெளியான அதிர்ச்சி தகவல்! மாற்றம் வருவதற்கான வாய்ப்பா?

1133

கடந்த மாதம் அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது. இதில் முக்கிய சம்பவம் பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் தான்.

ஆம் இந்த தேர்தலில், பெரும் ஜாம்பவனாக வலம் வந்த பி. வெற்றிவேல் இங்கு பெற்றுள்ள வாக்குகள் அதிர்ச்சிகரமாக உள்ளது. பி.வெற்றிவேல் இந்தத் தேர்தலில் வெறும் 6,274 வாக்குகள் தான் பெற்றுள்ளார். இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தொகுதியின் ஜாம்பவான். வடசென்னையின் நாயகன், அமமுகவின் முக்கிய தலைவர், பணம் காசுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் வெறும் 6 ஆயிரத்து சொச்சம் ஓட்டு மட்டுமே வாங்கி டெபாசிட்டைப் பறி கொடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

மேலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி 20 ஆயிரத்து 508 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெர்லின் சுகந்தி 8,585 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மக்கள் மாற்றத்தை பெற வேண்டும் என்று என்னத் தொடங்கி விட்டனர் என்றே சொல்லலாம். மேலும், வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த தோல்வி எதிரொலிக்குமா? மாற்றம் வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of