“தளபதி 65” படத்தை இயக்குகிறாரா பேரரசு..? கதை இருக்கு ஆனால்..? – போட்டுடைத்த இயக்குனர்…

476

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக வெளியான தகவலை இயக்குநர் பேரரசு மறுத்துள்ளார்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் தீபாவளி ரிலீசாக வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் விஜய் இன்னமும் ஒப்பந்தமாகவில்லை.

ஆனால் அடுத்ததாக விஜய் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் அதனை உறுதி செய்வது போல், பட விழா ஒன்றில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் இது தொடர்பாக பேசினார்.

அந்த விழாவில் கலந்து கொண்ட பேரரசுவும் மகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி தெரிவித்தார். இதனால் அத்தகவல் உண்மை என ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் இயக்கவில்லை என பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், ” விஜய் 65 படத்தை நான் இயக்கப்போவதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன்.

ஆனால் அச்செய்தி தொடர்ந்து வந்து தற்பொழுது உறுதியானசெய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது .

நான் திரு. விஜய் அவர்களுக்காககதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை,நானும்,என் கதையும் திரு. விஜய் அவர்களுக்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை.

மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்”, என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of