கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்

792

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவை காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சீஷா தொண்டு நிறுவனம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்களில் 500 குடும்பங்களுக்கு காருண்யா குழுவினர் நேரில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

மேலும் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
அடுத்த மாதம் காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயிரம் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான எற்பாடுகளை காருண்யா பேராசிரியர் கார்த்திகேயன், சீஷா மருத்துவர் சாமுவேல் தாமஸ், மனோஜ் ஜெபசிங் ஆகியோர் தொடங்கி உள்ளனர்.

இதற்கான எற்பாடுகளை காருண்யா பேராசிரியர் கார்த்திகேயன். சீஷா மருத்துவர் சாமுவேல் தாமஸ், மனோஜ் ஜெபசிங் ஆகியோர் தொடங்கி உள்ளனர்.