பெரியார் அமெரிக்காவில் பிறந்திருந்தால்..! – ஆதங்கப்பட்ட தமிமுன் அன்சாரி..!

372

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்தவிழா நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பேசினார்.

பெரியார் அமெரிக்காவில் பிறந்திருந்தால் உலக தலைவராக போற்றப்பட்டிருப்பார். ஏன் இந்தியாவில் இருக்கும் டெல்லியில் பிறந்திருந்தால் இந்திய தலைவராக போற்றப்பட்டிருப்பார்.

ஆனால் அவர் தமிழகத்தில் பிறந்ததால் அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிவிட்டதாக தமிமுன் அன்சாரி தெரிவித்தார். 

அவருடைய புகழை உலகம் அறிந்துகொள்ளும் வகையில் அவருடைய கொள்கையை அனைத்து நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கடந்து, சமூக நீதிக்காக அவர் நடத்திய போராட்டம் காரணமாகவே அவரை போற்றுவதாக தமிமுன் அன்சாரி விளக்கம் அளித்தார்.

பெரியார் அரசியல்வாதியல்ல அவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி என புகழாரம் சூடினார்.