இணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து

1175

நடிகர் சிம்பு பாடி நடித்திருக்கும் பெரியார் குத்து எனும் ஆல்பம் பாடல் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தை பெரியாரின் கருத்துக்களை போற்றும் வகையில் உருவாகி உள்ள இந்த பாடலுக்கு பெரியார் குத்து என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். கருப்பு சட்டை வேட்டி போட்டு, கிராஃபிக்ஸ் பெரியார் சிலை முன்னால் குத்தாட்டம் போடுகிறார் சிம்பு. நாட்டின் பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த பாடலில் வரிகள் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ் மணி இசையமைத்துள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

Advertisement