செல்லப் பிராணிகள் பட்டியலில் பறவைகளை நீக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

122

செல்லப் பிராணிகள் பட்டியலிலிருந்து பறவைகளை நீக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மிருகவதை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் என்ற விளக்கத்தை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திறந்த வான்வெளியில் பறப்பதற்கான அடிப்படை உரிமையை பெற்றிருக்கும் பறவைகளை, செல்லப் பிராணி என கூண்டுக்குள் அடைத்து வைக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மிருகவதை தடுப்புச் சட்டத்திலிருந்து செல்லப் பிராணிகளுக்கான விளக்கத்தை நீக்கினால், மீன் காட்சியகத்தில் மீன்களை வைத்திருப்பது முதல் மிருககாட்சிசாலையில் விலங்குகளை வைத்திருப்பது வரை அனைத்துமே சட்டவிரோத காவலாக மாறிவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கின் உத்தரவை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement