திடீரென மயங்கிய உரிமையாளர்! நெகிழ வைத்த நாயின் செயற்பாடு.

96

சீனாவில் உரிமையாளர் மயங்கி விழுந்தமையைக் கண்ட அவரின் வளர்ப்பு நாய் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு வழிகாட்டி அவரிடம் அழைத்து வந்துள்ளது.

வீதியில் நடுவில் காத்திருந்த குறித்த நாய், ஆம்புலன்ஸ் வந்ததும், அதை வழிகாட்டி தனது உரிமையாளரிடம் அழைத்துச் செல்லும் காட்சிகள் ஆம்புலன்சில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

மீட்புக் குழுவினரில் ஒருவர், குறித்த நாய் ஆம்புலன்ஸ் தன் பின்னால் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக, பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே ஓடுவதை ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

அந்த நாயின் செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.