மெஹுல் சோக்சி கைது வாரண்ட்டை ரத்து செய்யுமாறு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல்

333
mehul-choksi-nirav-modi

நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்சி தனக்கு கைது வாரண்ட்டை ரத்து செய்யுமாறு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற நிரவ் மோடி, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வழக்கில் நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய நபர்களையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது வாரண்ட்டை ரத்து செய்யுமாறு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சோக்சி மனு தாக்கல் செய்துள்ளார். சோக்சி சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.