பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை

1115
Today Petrol price

சென்னையில் பெட்ரோல் லிட்டர் 86 ரூபாய் 70 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் 78.91காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. சிறிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்விலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 19 காசுகள் அதிகரித்து 86 ரூபாய் 70 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 91 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

Advertisement