உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை பொதுமக்கள் வேதனை

757

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 25 காசுகள் உயர்ந்து 87 ரூபாய் 05 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதே போல் டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்காமல், வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் அரசுகளால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரித்துள்ளனர்.

Advertisement