மும்பைக்கு நிகராக சென்னையிலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

115

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து விற்பனையாகிறது. மும்பைக்கு நிகராக சென்னையிலும் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.82 ரூபாய் 62 காசுகளாகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75 ரூபாய் 61 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே மும்பையில் தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 87 ரூபாயக்கு விற்பனையாகிறது. விரைவில் சென்னையிலும் அந்த நிலை ஏற்படும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here