மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது

151

சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது, கீழமூவர்க்கரையை சேர்ந்த மீனவர், திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த மீனவரின் படகை மோதியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், இருவரும் தங்களது கிராமங்களுக்கு சென்று நடந்த பிரச்சனை குறித்து கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கீழ மூவர்க்கரையை சேர்ந்த மீனவர்கள், 50க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் திருமுல்லைவாசல் கடல் எல்லையில் தாக்குவதற்காக நின்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருமுல்லைவாசல் மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் நடுக்கடலுக்கு சென்றனர்.

இதனை அறியாத கீழ மூவர்க்கரை மீனவர்கள் தாங்கள் எடுத்து வந்த பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசியுள்ளனர். இதனையடுத்து, கீழமூவர்க்கரையை சேர்ந்த சுரேஷ், கவுசிக், சுகுமார், காசிராஜன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of