பெட்ரோல் பங்கில் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு!

504

தமிழகத்தில் சிறைக்கைதிகளை வைத்து இயங்கும் புதியப் பெட்ரோல் பங்குகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் தமிழக அரசோடு கூட்டு சேர்ந்துள்ளது.

மேலும் வேலூர், கோவை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்குகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கானொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைக் கைதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பெட்ரோல் வங்கிகளில் சிறைக் கைதிகள் மற்றும் சிறைத் துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர். கோவையில் உள்ள பெட்ரோல் வங்கியில் கோவை சிறையில் உள்ள 2000 கைதிகளில் 23 பேர் மட்டுமே நன்னடத்தை அடிப்படையில் இங்கு பணியாற்ற இருக்கின்றனர்.

மேலும் இந்த பெட்ரோல் நிலையங்களில் சிறைக்குள் சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்களும் விற்பனைக்கு வைக்க இருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of