மத்திய பட்ஜெட்டின் எதிரொலி..! – எகிறிய பெட்ரோல்-டீசல் விலை

365

மத்திய பட்ஜெட் தாக்கலின் போது பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் கலால் வரி அதிகமாக வசூலிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

தொடர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக நடுத்தர,ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தால் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிவருகிறது.

மத்திய பட்ஜெட் ஏழை,நடுத்தர மக்களுக்கான முன்னேற்றம் குறித்து ஏதும் இல்லை என அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.57 காசுகள் அதிகரித்து 75.76 ரூபாயும், டீசல் விலை ரூ.2.52 காசுகள் அதிகரித்து ரூ.70.48 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of