பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மனு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

690

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், விலை உயர்வு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு விலையை குறைக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாக தெரிவித்தார்.

எனவே பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார். இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் மனுவை விசாரிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement