மக்கள் பணத்தை சுரண்டி மத்திய அரசு பயனடைந்துள்ளது

989

மக்கள் பணத்தை சுரண்டி மத்திய அரசு பயனடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10 ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நைனார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன்,

கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹாருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வேண்டும் என்றும், மக்கள் பணத்தை சுரண்டி மத்திய அரசு பயனடைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Advertisement