குறைந்தது பெட்ரோல், டீசல் விலை..!

494

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மேகாலயா முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க அரசு முடிவு செய்தது. இதனால் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 5 குறைந்துள்ளது.

Advertisement