தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

417

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை வேகமாக உயர்ந்தது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33 ஆகவும், டீசல் விலை ரூ.79.79 ஆகவும் உயர்ந்தது. அதேசமயம் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.91.34 ஆகவும், டீசல் விலை ரூ.80.10 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் மீதான வரியில் ரூ.2.50 மத்திய அரசு குறைத்தது. இதேபோல், சில மாநிலங்களும் தாங்கள் விதிக்கும் வரியில் ரூ.2.50 குறைத்தன.

இதனிடையே சர்வதேச சந்தையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையத் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக குறைக்க தொடங்கின. இதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.95 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த அக்டோபார் மாதம் 4ம் தேதி இருந்த விலையிலிருந்து, பெட்ரோல் ரூ.11.32ம், டீசல் ரூ.7.84மாக விலை குறைந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of