பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைவு

672

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மொத்தம் 5 ரூபாய் அளவுக்கு பெட்ரோல் , டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிய வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்

 

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மொத்தம் 5 ரூபாய் அளவுக்கு பெட்ரோல் , டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிய வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடியுடன் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர்  ஆலோசனை நடத்தினர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ரூபாய் குறைப்பதாகவும் கூறினார்.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக அவர்  அறிவித்தார்.

கலால் வரி குறைப்பால் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று  கூறிய அருண்ஜெட்லி, இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

மாநில அரசுகளும் தங்களது சேவை வரியில் 2 ரூபாய் 50 காசுகளை குறைக்க வேண்டும் என்று அருண்ஜெட்லி கேட்டுக்கொண்டார்.

அதன்படி உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் மொத்தம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்க 5 ரூபாய் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே தமிழகத்தில் சேவை வரி குறைக்கப்படுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.

 

Advertisement