மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாய்

454
petrol-price

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது முதல், அதன் மீதான விலை நாள்தோறும் பைசாக்கள் கணக்கில் உயர்த்தப்பட்டு, தற்போது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும், எடுக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை எட்டியுள்ளது.

இதுவே இந்திய வரலாற்றில் உச்சபட்ச பெட்ரோல் விலை உயர்வு என்று பெட்ரோல் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை எட்டும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.