100 ரூபாயை எட்டியது பெட்ரோல் விலை..! கடும் ஷாக்;..!

437

இந்தியாவில் அதிக வரி வருவாயை தரும் பொருட்களில் மிகவும் முக்கியமானது பெட்ரோல் மற்றும் டீசல். இதன் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வருவதால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயை எட்டியிருப்பது அம்மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வதால், அது மற்ற பொருட்களின் விலையேற்றத்துக்கும் காரணமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர்.

Advertisement