ஒரு வாரத்தில் 2 ரூபாய் உயர்ந்த பெட்ரோல் விலை

170

சென்னையில், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு, 20 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், விலை டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்தில் மட்டுமே பெட்ரோல் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.